மகளிர் சுயஉதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கல்
திருச்சி, அக்.6 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை வழங்கி உரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மகளிர் சுயஉதவிக்குழு திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஒன்றியக்குழு தலைவர் சத்யாகோவிந்தராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.