எலி ‘பேஸ்ட்’ சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

0 467
Stalin trichy visit

 

திருச்சி, அக்.6  திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி காயத்ரி ( 29). இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மனக்குழப்பம் காரணமாக எலிப்பேஸ்ட் சாப்பிட்டு தனது குழந்தை ஐந்து வயது ஜெய்ஸ்ரீக்கும் கொடுத்துள்ளார். இதை அடுத்து கடந்த 24 ஆம் தேதி துறையூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் 30ஆம் தேதி சென்னை வடபழனி கே எம் சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 4 10 23 மதியம் 12:50 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவம் குறித்து காயத்ரியின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்குப்பதிந்து காயத்ரி உடலை உடற்கூறு பரிசோதனைக்கு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.