பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் செயின் பறிப்பு
திருச்சி, அக்.7 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெருமாம்பட்டியைச்
சேர்ந்தவர் அம்மாகண்ணு ( 65) இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்த மர்மநபர் அங்கு வந்துள்ளார். கை கால் மூட்டு வலிக்கு நிவாரண மருந்து தருவதாக கூறியுள்ளார். சோதனைக்காக மருந்தை அம்மாக்கண்ணு கையில் தடவிய உடன் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 6 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து அம்மாக்கண்ணுவின் மகன் நந்தகுமார் புத்தாநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்தவரிடம் மயக்கமருந்து தடவி மர்மநபர் செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.