திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில் துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துமணி முப்பத்தி ஆறு என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து 475 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.