முன் களப் பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
கொரானோ நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது மேலும் நோய் தொற்றை தடுக்கும் வகையில் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி தூய்மை பணியாளர்களான முன் கள பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் நிரந்தர மற்றும் தற்காலிக முன் களப்பணியாளர்கள் 3000 பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 30 முட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகரச் செயலாளர் அன்பழகன் பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.