திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆர்.சக்திவேல் நேற்று (ஜூன்.9) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக இருந்து திருச்சி மாநகர காவல்துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அவர் கூறுகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கு பணியைச் சிறப்பாக மேற்கொள்வேன் என்று கூறினார்.