சிலம்பத்தில் ஒரு தேடல் லீக் போட்டி

0 344
Stalin trichy visit

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் நடத்தும் உலக வரலாற்றிலே தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை, சிலம்பத்தில் ஒரு தேடல் லீக் போட்டி 2023 என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் பல்வேறு பிரிவுகளில்

போட்டிகள் நடத்தபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் தலைவர் டென்னிசன் :

அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிலம்பத்தை உலக அளவில் போற்றக்கூடிய போட்டியாக நிலை நிறுத்த வேண்டும் என்பதை எங்களுடைய நோக்கம். ஆகையால் வருகின்ற டிசம்பர் மாதம் சென்னையில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களில் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர்களை தேர்வு செய்து, சென்னையில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.