காதலனுடன் தகராறு – திருச்சி கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

0 1,304
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் தனரக்க்ஷனா(22).

திருச்சி தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து வந்தார். இவர் திருச்சியை சேர்ந்த சூர்யா என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சூர்யாவுடன் பேசும் போது அவருடன் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனரக்க்ஷனா வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த தனரக்க்ஷனாவை பெற்றோர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பிறகு மேல் சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தந்தை அண்ணாமலை நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.