நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 663
Stalin trichy visit

தமிழ்நாடு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிராஜுதின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 01.01.2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியவாறு 01.07.2021 முதல் வழங்கவும்,2015 நவம்பர் முதல் நாள் வரை வழங்கவேண்டிய பஞ்சப் படி நிலைவையை போக்குவரத்து ஓய்வூதியர்க்கு தாமதமின்றி வழங்கவும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.