ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது…

0 437
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி நகரில் தனது வீட்டின் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் காந்திநகர் பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது
காந்திநகர் இரண்டாவது குறுக்கு சந்து பகுதியைச் சேர்ந்த 54 வயதான குணசேகரன் தனது வீட்டின் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றததில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்றதில் ரூ. 1300 பணம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.