கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுபோட்டி- தஞ்சை மாணவர் முதலிடம்…

0 258
Stalin trichy visit

மணப்பாறையில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுபோட்டி. தஞ்சை மாணவர் முதலிடம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ்சங்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் மன்றம் சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. ஏன் திராவிடம், கலைத்தாயின் தவப்புதல்வன், முத்தமிழ் அறிஞர் எனும் தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுப் போட்டியில் தஞ்சை, கரந்தை கல்லூரியைச் சேர்ந்த வியானி விஷ்வா என்ற மாணவர் முதலிடம் பெற்றார். இதே போல் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பத்மா என்ற மாணவி இரண்டாம் இடமும், அய்யர்மலை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி அனு மூன்றாம் இடமும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வருகிற 9 ம் தேதி கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.