பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

0 293
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொப்பாவளியில் உள்ள லால்குடி அன்பில் சாலையில் மோட்டார் பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

லால்குடி அருகே மணக்கால் கீழத்தெருவைச் சேர்ந்தவர் காத்தையன்.இவரது மகன் 25 வயதான வெற்றிச்செல்வன்.இவர் தனது மோட்டார் பைக்கில் மணக்காலிருந்து அன்பில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா ஜீயபுரம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த 33 வயதான சாம்ராஜ் சரக்கு வாகனத்தில் அன்பிலிருந்து லால்குடி நோக்கி வந்து கொண்டிருத்தார். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் வேகமாகவும்,கவனக்குறைவாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொப்பாவளியில் உள்ள லால்குடி அன்பில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி கீழே விழுந்த வெற்றிச்செல்வன் படுகாயமடைந்தார்.விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினர்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.