தடைசெய்யப்பட்ட குட்கா பொருள் பறிமுதல் : 3 பேர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சென்று ஆய்வு செய்த போது குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வந்தது தெரியவந்தது. செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செந்தில் துவரங்குறிச்சி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பிராப் சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரையும் துவரங்குறிச்சி போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து சுமார் 25 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.