சாலையோர வாசிகளுக்கு போர்வை வழங்கிய பள்ளி மாணவி

0 354
Stalin trichy visit

திருச்சி, அக். 24  திருச்சி சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவி சுகித்தா ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். சிலம்பத் துறையில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியதுடன் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2 முறை இடம்பிடித்த இவர் தனது சகோதரருடன் இணைந்து தன்னால் இயன்ற சமூகப் பணியினையும் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மார்கழி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே பருவநிலை மாற்றத்தால் இரவில் குளிர் நிலவிவருவதால் திருச்சி மாநகர் பகுதிகளில் சாலையோரங்களில் படுத்து உறங்கும் நடைபாதைவாசிகள், குளிரால் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் போர்வை வழங்கி அவர்களின் குளிரை போக்கினார்.

ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் மற்றும் காவிரி பாலத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்ற மற்றும் சாலையோரத்தில் வசிக்கும் 100 பேருக்கு கடும் பனியையும் பொருட்படுத்தாது நள்ளிரவில் தனது சகோதரருடன் சென்று போர்வையை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

4வது ஆண்டாக தானும் தனது சகோதரர் சுஜீத்தும் சேர்ந்து உண்டியலில் சேர்த்த பணம் மற்றும் பெற்றோரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு போர்வை வழங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தனக்கு மிகுந்த மன நிறைவு அளிப்பதாக மாணவி சுகித்தா தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.