வாழைத்தாரை ஆட்சியரிடம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பண்ணை மூலம் வளர்ந்த வாழைத்தாரை ஆட்சியரிடம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணை மூலம் வளர்ந்த வாழைத்தாரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரதீப்குமாரிடம் வாழைத்தாரை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.
இருங்களூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழிகாட்டுதலின்படி 15 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் வளர்ப்பு, ஆடு மாடு வளர்ப்பு,நாட்டுக்கோழி வளர்ப்பு, காய்கறி தோட்டம் வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.இந்த ஒருங்கிணைத்த பண்ணையத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழு பெண்களும் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாகுபடி செய்த வாழை மரங்களில் விளைந்து வாழைத்தார் ஈன்றுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாகுபடி செய்த வாழையில் முதன் முதலில் விளைந்த வாழைத்தரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஆட்சியர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து வாழைத்தரை இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் வழங்கினார்.