குமுளூர் அரசு கல்லூரியில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை முகாம்

0 474
Stalin trichy visit

திருச்சி, அக். 31 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இந்திய தேர்தல் ஆணையம்,லால்குடி தேர்தல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் இணைந்து லால்குடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இளம் வாக்காளர்கள் சேர்க்கை முகாம் கல்லூரி வளாகத்தில் முதல்வர் முனைவர் கே. மாரியம்மாள் தலைமையில் தேர்தல் துணை வட்டாச்சியர் விஜய், வருவாய் ஆய்வாளர், குமுளூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் முனைவர் ஜெயபிரகாஷ், V. சுகன்யா YRC ஆகியோர்களின் முன்னிலையில்  முகாம் நேற்று  நடைப்பெற்றது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இந்த முகாமிற்கான ஏற்ப்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் M. சக்திவேல்மாறன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.