இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளர் அட்டை இலவசமாக பெறலாம்

0 301
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையத்தில் மாற்று வாக்களாளர் புகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்கள் அக்டோபர்.1-ந் தேதி முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.