திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் 21 வயதான இளைஞர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 வயதான கோகுல். இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் திருப்பைஞ்சீலி பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அனைவரிடமும் நன்றாக பேசி வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவில் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த போது மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.