பூ வியாபாரி எரித்துக் கொலை : மனைவி உள்பட 5 பேர் கைது
திருச்சி, நவ. 11 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுகுடியில் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவர். கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி. உடலை எரித்து இரண்டு பாகங்களாக காவிரி,கொள்ளிடம் ஆற்றில் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம். கொலையை மறைக்க உடந்தையாக இருந்த மனைவி, கள்ளக்காதலன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் பிரபு (30), இவரது மனைவி விநோதினி(27) .இவர்களுக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் உள்ளனர். பிரபு சமயபுரம் கடைவீதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்காக காலையில் செல்லும் பிரபு இரவு தான் வீடு திரும்புவார்.
இந்நிலையில் பிரபுவின் சகோதரர் தனது அண்ணனை பார்ப்பதற்காக கடந்த 5 ம் தேதி மதியம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அண்ணி வினோதியிடம் அண்ணன் குறித்து கேட்டுள்ளார் அதற்கு இன்னும் வீட்டுக்கு வரவில்லை என கூறியுள்ளார். மேலும் சமயபுரம் கடைவீதி பகுதியில் சென்று தனது சகோதரர் குறித்து விசாரித்துள்ளார். அங்கும் பூ வியாபாரம் செய்ய வரவில்லை என கூறியதால் சமயபுரம் காவல் நிலையத்தில் தனது அண்ணனை காணவில்லை என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வந்தனர் விசாரணையில் வினோதிக்கும் பாரதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து வினோதினியை விசாரணை செய்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாரதி (23) என்பவருக்கும் வினோதினிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் மாகாளிக்குடி பகுதியில் கள்ளக்காதலனை தனிமையில் சந்திப்பதற்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரிடம் இந்த இடத்தை விட்டு வெளியே செல்லலாம் என கூறி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சமயபுரம் சந்தைகேட் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அப்போதுதான் வாலிபருக்கு தன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு சமயபுரம் அருகே எஸ். கல்லுகுடியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
தனது கள்ளக்காதலை தொடர கணவன் தடையாக இருப்பதால் கணவனை கொலை செய்ய திட்டமிட்ட வினோதினி கள்ளக்காதலுடன் சேர்ந்து கடந்த 4 ம் தேதி இரவு தூக்க மாத்திரை கொடுத்து தனது கணவன் பிரபுவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கம் தெரிந்து விடும் என்பதால் கள்ளக்காதலன் பாரதி மற்றும் அவர்களது நண்பர்களான சமயபுரம் பகுதி சேர்ந்த ரூபன் (26), பாபு (18), திவாகர் (18), ஸ்ரீனிவாசன்18) ஆகியோர் உதவியுடன் கடந்த 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் காரில் உடலை எடுத்துச் சென்று திருச்சி மன்னார்புரம் அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் 6 ம் தேதி மாலை எரித்த உடலை கள்ளக்காதலன் பாரதி பார்த்தபோது உடல் சரிவர எரியாமல் இருந்துள்ளது. இதனை வினோதினிக்கு தெரிவித்த கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரின் உடலை இரண்டாக வெட்டி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரன்பேரில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் மிதுன் குமார் மற்றும் போலீசார் விநோதினி கள்ளக்காதலன் பாரதி உள்ளிட்ட5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளர்.
கள்ளக்காதலால் கட்டிய கணவரை கொலை செய்து எரித்து கொன்று, உடலை வெட்டி ஆற்றில் வீசப்பட்டப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலால் கணவனை கொலை செய்த மனைவியின் செயலால் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.