புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
திருச்சி, நவ. 17 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் கூடுதல் மின்பளு காரணமாக புதிதாக மூன்று மின்மாற்றிகளை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அர்ப்பணித்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி 500’க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.19.52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் சண்முகம் நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.