வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

0 537
Stalin trichy visit

திருச்சி, நவ. 28 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

மணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(64). இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி வசித்து வருகின்றனர் ஜெய்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காந்தி நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு அதேப் பகுதியில் அருகில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு மனைவியுடன் சென்று விட்டார்.பின்னர் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நான்கு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஜெய் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.