புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

0 340
Stalin trichy visit

மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்காக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.18.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட லால்குடி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை தொடங்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் துரை மாணிக்கம்,நகராட்சி ஆணையர் குமார், ராஜ்மோகன் மற்றும் கவுன்சிலர் வைரக் காவியன் உள்ளிட்ட திமுக முன்னோடி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.