திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர்

0 795
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டத்திற்கு 14,400 டோஸ் கோவிஷீல்டு மருந்து வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும் மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் திருச்சி மாநகராட்சி 4 கோட்ட அலுவலகங்களிலும் 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக பகுதியில் கீழ்காணும 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாளை (ஜுன்12) காலை 10 மணிமுதல் வழங்கப்படும். மாநகராட்சி பகுதிகள் பொன்மலை, அரியமங்கலம், கோ.அபிசேகபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளான நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி. சிறுகாம்பூர், புதூர் உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி போட விரும்பும் தகுதி வாய்ந்தவர்கள் இம்முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.     

Leave A Reply

Your email address will not be published.