திருச்சி பிரஸ் கிளப் சார்பில் முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

0 702
Stalin trichy visit

Trichy press club

 

திருச்சி – தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணியினை பார்வையிட வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருச்சி விருந்தினர் மாளிகையில்  நேரில் சந்தித்த திருச்சி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் (திருச்சி பிரஸ் கிளப்) ‘பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததிற்கும், கொரோனா உதவித் தொகையாக,  ரூ 5,000 வழங்குவதற்கும்’ நன்றி தெரிவித்தனர்.
மேலும்  சங்க உறுப்பினர்களின் சந்தா தொகையில் இருந்து, முதல்வரின் கொரானா நிவாரண நிதிக்கு  ரூபாய் ஒரு லட்சத்தை முதல்வரிடம் திருச்சி பத்திரிகையாளர் மன்றத் (திருச்சி பிரஸ் கிளப்) தலைவர் க.சந்திரசேகர், செயலாளர் ஜோ.மகேஸ்வரன், பொருளாளர்  கு.வைத்தியலிங்கம் மற்றும் ரமேஷ், முரசொலி ராஜசேகர், வேலுச்சாமி, ஜெய்சங்கர், கலைஞர் டிவி ரமேஷ் ஆகியோர் வழங்கினார்கள்

Leave A Reply

Your email address will not be published.