மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0 198
Stalin trichy visit

திருச்சி, டிச. 6 டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும் திருச்சி மரக்கடை முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தினை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தக்கூடிய ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக அமைப்பினரின் கொள்கைகளை முறியடிப்போம் என முழக்கமிட்டனர். மேலும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டம் தெரிவித்தும்.
இந்தியா என்பது ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து இந்துக்களுக்கான நாடு என்று கூறும் குரல்களுக்கு எங்களுடைய எதிர்ப்புகளை இந்த ஆர்பாட்டத்தின் மூலம் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா மேற்கு மாவட்ட தலைவர் பெயர் அகமது ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மேலும் மாவட்டச் செயலாளர் இப்ராம்ஷா மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் நிலை வகித்தனர். மேலும் இதில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அதேபோல் இந்த டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளை மாநகரின் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தி இந்த நாளை அனுசரித்தனர்..

Leave A Reply

Your email address will not be published.