சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு
பொன்மலைப்பட்டி அருகே வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிரம்புகளை அகற்ற கோரி சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 46 வது வார்டு பகுதியில் பொன்னேரிபுரம்… முல்லை நகர்… பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் காந்தி நகர் செங்கோல் உடையார் தெரு திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நிலையில் அடைக்கல மாதா கோவில் கொடிமரம் பின்பகுதியில் உள்ள வடிகால் வாரி மாவடிகுளம் வரை மற்றும் அந்தோணியார் கோவில் பின்புறம் உள்ள வடிகால் வாரி பாதையையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சென்னையை போல் மழை காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகனங்களும் அந்த பகுதியில் செல்ல முடியாத இடையூறு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் வடிகால் வாரி பாதை ஆக்கிரம்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரி சாமானிய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர்