பா.ம.க. முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் அதிரடி கைது!

0 450
Stalin trichy visit

திருச்சி, டிச. 12  திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்து நீக்கப்பட்டவர்.

இந்நிலையில் பிரபாகரன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நேற்று இரவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்னர் தனது அலுவலகத்தில் பிரபாகரன் இருந்தார். அப்போது மூன்று நபர்கள் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த அரசு மருத்துவமனை போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த நான்கு பேரும் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.