மணப்பாறையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்சி, டிச. 16 திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வரும் (18-.12.20-23) முதல்(04.-01.20-24) வரை மக்களுடன் முதல்வர் புதிய திட்ட முகாம்கள் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள மாதா மக்கள் மன்றம், செவலூரில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி, மணப்பாறையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி, லெஷ்மி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6இடங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும் 45 வகையான சேவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளில் தங்களது கோரிக்கை தொடாபான மனுக்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.