பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, டிச. 16 திருச்சி கே.கே. நகர் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தனராஜ். இவரது மனைவி அமுதா சோபியா ( 49)இவர் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக ஆசிரியை அமுதா சோபியா மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமுதா சோபியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கே.கே. நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமுதா சோபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ஸ்டீபன் சந்தனராஜ் கே.கே. நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியை அமுதா சோபியா இறந்ததற்கான காரணம் என்ன என்று குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.