பைக் மோதியதில் ஆடுகளை ஓட்டிச் சென்ற பெண் உயிரிழப்பு

0 278
Stalin trichy visit

திருச்சி, டிச.18  திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மனைவி சரஸ்வதி (44) ஆடுகள் மேய்த்து வருகிறார்.நேற்று துறையூர் – நாமக்கல் செல்லும் சாலையில் தேவரப்பம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சரஸ்வதி மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது பின்னால் சங்கர் என்பவர் வேகமாக ஒட்டி வந்த மொபட் சரஸ்வதி மீது மோதியுள்ளது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சரஸ்வதி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உத்தரவின் பேரில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் இறந்து போன சரஸ்வதி உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெம்புநாதபுரம் போலீசார் மொபட்டை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக உள்ள சங்கர் (54) என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.