துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் பலி

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 25 துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து  விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த, வடிவேல் (வயது 40), மஞ்சுளா(55), ரவி(60) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழு பேர், ‘டாடா ஏஸ்’ சரக்கு வாகனத்தில், நேற்று காலை, மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அருகே, சாலையின் குறுக்கே வந்த பசு மாடு மீது, டாடா ஏஸ் வாகனம் மோ தி விபத்துக்குள்ளானது. அப்போது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கி, அந்த வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ், விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தின் மீது மோதி, எதிர்புற சாலைக்கு சென்றது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த வடிவேல், மஞ்சுளா, ரவி ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற ரூபன், பவுல் உட்பட நால்வர் படுகாயமடைந்து, மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.