இராதாபுரம் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

0 270
Stalin trichy visit

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்களின் இராதாபுரம் தொகுதியில்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் 117’வது ஆய்வை மேற்கொண்டார்.

ஸ்ரீ நித்திய கல்யாண சுந்தரி வெள்ளையன் செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
சபாநாயகர்  அப்பாவு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டு  முதலமைச்சர்  திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து தனது 118 வது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன்  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சங்கர் ரெட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொண்டார்.
கனமழையின் காரணமாக அப்பள்ளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டு வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் இப்பள்ளியில் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.