காமெடி நடிகர் போண்டா மணி மறைவு

0 376
Stalin trichy visit

காமெடி நடிகர் போண்டா மணி மறைவு
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
வின்னர், மருதமலை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இவர் பணியாற்றி உள்ளார்.
குறிப்பாக, ‘அடிச்சும் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’, ‘தக்காளிச் சட்னிய மூஞ்சில கொட்டி வச்சு இருக்கீங்க’, ‘நீங்க சீப்பா போட்ட பிளான சீப்பாலயே முடிச்சேன் பாத்தீங்களா’ என நடிகர் வடிவேலுவுடன் அவர் பேசிய வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று கடந்த ஒரு வருடமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.