தந்தை பெரியார் நினைவுநாள் : தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச. 24 தந்தை பெரியார் நினைவுநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டத்தில், திருச்சி கிழக்கு மாநகரம் திருச்சி-தஞ்சை மெயின்ரோடு காட்டூரில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருச்சி தெற்கு மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை அடுத்து அவரது சிலைக்கு மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா இவர்களின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன் லீலாவேலு சந்திரமோகன் செல்லையா நூர்கான் செந்தில், கார்த்தி பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ் ராஜ்முகமது மோகன் மணிவேல் பாபு சிவக்குமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணநிதி கங்காதரன் ராஜேந்திரன் செல்வம் உள்ளிட்ட பகுதி,ஒன்றிய,நகர, பேரூர்,வட்ட,வார்டு,கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டஅணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக தொன்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்