வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
நம்மாழ்வார் மோட்சத்துடன் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நிறைவு
திருச்சி, ஜன.2 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் நிறைவாக இன்று (02. 01. 2024) காலை நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் நடந்தது. இந்நிகழ்வுடன் கடந்த 21 நாட்களாக நடந்து வந்த ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவடைந்தது.