வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 7 ஆம் திருநாள் : ஆண்டாள் முத்து கொண்டையுடன் நம்பெருமாள்

0 128
Stalin trichy visit

திருச்சி, டிச.26  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பெரிய திருவிழாவான  வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான இன்று உற்சவர் நம்பெருமாள்  அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருவாலி திவ்ய தேச பாசுரம் செவிமடுக்க ஆண்டாள் (கிருஷ்ணன்) முத்துக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; வைரக்கல் அபய ஹஸ்தம் சாற்றி திருமார்பில் இருபுறமும் முதன்முறையாக மகர‌ கர்ண பத்ரங்கங்களை நேர்த்தியாக அணிந்து; மகரி ; ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் நடுவில் சாற்றி;சிகப்பு கல் வைத்த வெள்ளை பூ பதக்கம் அணிந்து; வரிசையாக வைரக்கல் மகர கண்டிகைகள் திருமேனி நிறைந்து சாற்றி ; தங்கப் பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை அணிந்து; பின் சேவையாக – நீல கல் வைத்த வெள்ளை பக்க்ஷி பதக்கம் – புஜ கீர்த்தி ; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து
சேவை சாதித்தார்

Leave A Reply

Your email address will not be published.