பைக் மோதியதில் முதியவர் பலி

0 224
Stalin trichy visit

நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய முதியவர் மீது பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருச்சி, ஜன.5 திருச்சி மாவட்டம்,  முசிறி சடையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்(70). இவர் கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி காலை நடை பயிற்சி முடித்துவிட்டு முசிறியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் அருகே சாலையை கடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் ஒருவர் ஓட்டி வந்த பைக் ராஜகோபால் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனைக்கு ராஜகோபாலை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இச்சம்பவம் குறித்து ராஜகோபால் மகன் ராஜா செந்தில் குமார் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இறந்து போன ராஜகோபால் உடல் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.