திருச்சியில் அறிவுசார் மைய பசுமைக் கட்டடம் : காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, ஜன.5 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (05.01.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பிலும், முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 53 குதுப்பாபள்ளத்தில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மைய பசுமைக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.