அனுமன் ஜெயந்தி முன்னிட்டு 1008 சகஸ்ர தீபம் ஏற்றி சிறப்பு பூஜை
திருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகரில் உள்ள ஸ்ரீ கைலாஷகமல கணபதி ஆலயத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 சகஸ்ர தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாச கமல கணபதி ஆலயத்தில் அருள்பாலித்து வரும் ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள், ஆபரணங்கள், வெற்றிலை மாலை, துளசி சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி முன்பு 1008 விளக்குகள் ஏற்றி சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சகஸ்ர தீபம் ஏற்றினர். தொடர்ந்து ஆஞ்சநேயர் பஜனை பாடல் பாடப்பட்டு சிறப்பு மகா தீபாரணை நடைபெற்றது.