அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமயபுரம் கோவிலில் நாளை பொதுவிருந்து

0 252
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 55 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பொது விருந்து மற்றும் பருத்தியிலான நூல் புடவைகள் வழங்கும் விழா நாளை 12.00 மணி அளவில் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது என கோயில் இணை ஆணையர் தகவல்.

பேரறிஞர் அண்ணாவின் 55 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் மண்டபத்தில் சாதி, சமய வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்கும் பொது விருந்தும் அவனைத் தொடர்ந்து பருத்தியிலான நூல் புடவைகளை வழங்க கோயில் நிர்வாக சார்பில் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.