மணப்பாறையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 205
Stalin trichy visit

திருச்சி, பிப்.23  திருச்சி மாவட்டம், மணப்பாறை மின்வாரிய கோட்ட அலுவலகம் முன்பு மின்வாரிய பிரிப்பு, முத்தரப்பு ஒப்பந்தத்தால் பறிபோகும் சலுகைகளும், உரிமைகளும் குறித்த வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியூ மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் கலந்து கொண்டு முத்தரப்பு ஒப்பந்தத்தால் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியூ மணப்பாறை கோட்டத்தலைவர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கோட்டச் செயலாளர் ரியாஜூதீன், துணை தலைவர் ஜான்ஜோசப், துணை செயலாளர் செபஸ்தியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.