நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி: அருண்நேரு பேட்டி

0 232
Stalin trichy visit

திருச்சி, பிப். 23  தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று நடைபெற்றது இந்த திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபரும் அமைச்சர் கே என் நேருவின் மகனுமான அருண் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்..,

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு..

திருச்சி பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகள் எதை கொடுத்தாலும் போட்டியிட தயார்.  திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு என அருண் நேரு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.