திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி புதிய அலுவலகம் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது.இந்த நிலையில் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக திறப்பு விழா இன்று மெயின்கார்டு கேட் காமராஜர் வளைவு அருகே அமைந்துள்ளது. இதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.