சிறப்பு செய்தி – Exclusive News – காவிரி ஆற்றில் படித்துறைகள் சீரமைக்கப்படுமா?

0 663
Stalin trichy visit

காவிரி ஆற்றில் திருச்சி கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையத்திற்கு அருகில் படித்துத்துறை அமைந்துள்ளது. இந்த கம்பரசம்பேட்டை படித்துறை அருகாமையில் மயானங்கள் இருந்து வருகிறது.

 

இந்த மயானத்திற்கு வரும் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யவும், திதி கொடுப்பதற்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள பலர் தினந்தோறும் கம்பரசம்பேட்டை காவிரி ஆற்று தடுப்பணையில் குளித்து வருகின்றனர்.

இந்த கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளிப்பதற்கு சுற்றிலும் கம்பிகள் அமைத்து படித்துறையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கம்பரசம்பேட்டை காவிரி ஆற்று படித்துறை படிகள் கடந்த சில நாட்களாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் கம்பரசம்பேட்டை படித்துறையில் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.