திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நாளை (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு பேரறிஞர் அண்ணாவின் 113-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புள்ளம்பாடி பேரூராட்சி நான்கு ரோடு அருகில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தபடவுள்ளது.
அதுசமயம் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி, MGR மன்றம், அம்மா பேரவை, MGR இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் ஊராட்சி, கிளைக்கழக கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள், செயல்வீரர்கள்- வீராங்கணைகள் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தொவித்துள்ளார்.