திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளான நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
மேலும் தந்தை பெரியாரின் பிறந்த நாளான வருகிற 17.09.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈ.வே.இரா.பெரியார் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அதுசமயம் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, கோட்டத்தலைவர்கள்,
உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.