சாலையோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

0 381
Stalin trichy visit

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(45). இவருக்கும் துறையூரை சேர்ந்த அபிராமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற 4 வயதில் மகன் உள்ளான். அபிராமியின் தந்தை துறையூர் தீரன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். துறையூரில் கறிகடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் பாஸ்கர் தனது மனைவி குடும்பத்தினருடன் துறையூரில் மாமனார் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் பாஸ்கர் தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக பவித்திரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சேலத்தில் எலக்ட்ரிகல் கடையில் வேலை பார்க்கும் மணிகண்டன் (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் துறையூர் நோக்கி இருவரும் வந்துள்ளனர். அப்போது தா.பேட்டை அருகே தேவரப்பம்பட்டி – கண்ணனூர் பாளையம் செல்லும் வழியில் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பாஸ்கர், மணிகண்டன் இருவரும் தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்து போனார்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் விரைந்து சென்று பாஸ்கர், மணிகண்டன் ஆகியோரது உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.