அருண்நேருவை ஆதரித்து சி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பரப்புரை

0 243
Stalin trichy visit

பெரம்பலூர், மார்ச் 28  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு ஆதரித்து பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர், செங்குணம்,அருமடல், ‌ கவுல்பாளையம், நெடுவாசல், க.எறையூர்,கல்பாடி, அ.குடிக்காடு, அயிலூர்,  சிறுவாச்சூர்,நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழ்க்கணவாய்,வேலூர், சத்திரமனை உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம், பெரம்பலூர் ஒன்றியச் செயலாளரும் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ராஜ்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில இரா.முத்தரசன் நேற்று வாக்கு சேகரித்தார்.

எளம்பலூர் கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்‌ முத்தரசன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பேசுகையில், நள்ளிரவுக்கூட்டணி, கள்ளக்கூட்டணி ஆகிய இரண்டையும் தமிழகத்தில் தோற்கடிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்திய அரசை அகற்ற வேண்டும் என்றும் பேசினார்.
இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார்,தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி,
எளம்பலூர் முன்னாள் ஊராட்சி மன்றக் தலைவர் ஆர்.சி.ராமசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, அகில இந்திய தொழிலாளர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.