கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பரப்பு
கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி களம் இறக்கப்பட்டு தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியில் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். 2014 ம் ஆண்டு 400 ரூபாய்க்கு நாம் வாங்கிய எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது 1200 ரூபாய். ஆனால் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் சிலிண்டர் விலையை குறைக்கின்றேன் என்று சொன்னார். ஏன் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் வரவில்லையா? இப்ப தான் மகளிர் தினம் கண்ணுக்கு தெரிகிறதா? மகளிர் தினம் மட்டுமல்ல மோடி இந்த ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக கிழவிகள் தினத்தை கூட கொண்டாடுவார். எல்லா கிழவிகளுக்கும் பாக்கு, வெற்றிலை கூட இலவசமாக கொடுப்பதாகக்கூட கூறுவார். ஏனென்றால் எப்படியாவது அந்த ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என்ற வெறியில் அவர் இருந்து கொண்டிருக்கிறார. எந்த மதத்தினராக இருந்தாலும் நாம் எல்லாம் அண்ணன் தம்பி உறவுகளாக பழகக் கூடிய நம்மை பிரித்தாழும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறது பாஜக என்று குற்றஞ்சாட்டினார்.
பின்னர் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்து பேசுகையில், நூறுநாள் வேலையே கொடுக்கக்கூடாது என மத்திய அரசு சொல்கிறது. நூறுநாள் வேலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற ஒன்றிய அரசு டெல்லியில் இருக்கக்கூடாது. அது மாறினால்தான் நூறுநாள் திட்டம் முழுமையாக வரும். இன்னும் பல நல்லபல வளர்ச்சி திட்டங்களை செய்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு ஆதரவான அரசு டெல்லியில் அமைய வேண்டும். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. அதேபோல் அரசு மருத்துவமனைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் ஏழை, எளிய, சாதாரண மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பதற்காக அவை மேம்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான ஆட்சி நடைபெற வேண்டும். மோடியின் ஆட்சி விவசாயிகளை சுட்டு தள்ளுகின்ற ஆட்சியாக உள்ளது. ஏழை எளிய சாதாரண மக்களுக்கான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு சிறப்பான அரசு நடைபெறுவது போல் டெல்லியில் சிறப்பான அரசு அமைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். என்றார்.
பிரச்சாரத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின்போது பெண்கள் அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதில் கலந்து கொண்டர்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சூறாவளி சுற்றுப்பயணம்
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தெகுதி பொறுப்பாளர் சேகரன் தி.மு.க.மாவட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ் குணசேகரன் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி ராமசாமி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோவிந்தராஜ் மாவட்ட அணி அமைப்பாளர் விஜய கோபால்
மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்