வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீ விபத்து

0 392
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி. கல்விக்குடியில் உள்ள வயலில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில் இருந்த வைக்கோல் கட்டு மின் கம்பியின் மீது உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. வைக்கோல் கட்டு, லாரி எரிந்து சேதம். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா தம்மம்பட்டி ஜங்குமா சமுத்திரம் புங்கமரத் தெருவைச் சேர்ந்தவர் 34 வயதான சங்கர் இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இந்த லாரியில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுககா தம்மம்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (26) டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் லால்குடி அருகே டி. கல்விக்குடியில் உள்ள ஒரு வயலில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டு சென்றது.அப்போது அந்த வழியாக செல்லும் மின்கம்பியில் எதிர்பாராத விதமாக வைக்கோல் கட்டு உரசியதாக கூறப்படுகிறது.இதில் தீ விபத்து ஏற்பட்டு வைக்கோல் கட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் வீரர்கள் ரமேஷ் குமார், கனகராஜ், தரனிதரன்,ஜானி, பிரகாஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரி மற்றும் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.